search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மீது"

    • கோவை அதிரடி நடவடிக்கை
    • ஆபரேஷன் கந்துவட்டி வழக்கு பெண் மீது பாய்ந்துள்ளது

    கோவை,

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ஐ தொடர்ந்து ஆபரேஷன் கந்துவட்டி எனும் பெயரில் மேலும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கந்துவட்டி, ஆள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து ஆபரேஷன் கந்துவட்டி மூலம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குதல், பவர் எழுதி வாங்கி மிரட்டுதல் சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    டி.ஜி.பி. உத்தரவை அடுத்து, கந்து வட்டி தொடர்பாக கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 34) என்பவர் பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சந்திரா என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    புகாரில் கிருஷ்ணமூர்த்தி கூயிருப்பதாவது:-

    நான் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சந்திரா என்பவரிடம் ரூ.30 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினேன். சில காரணங்களால் என்னால் 2 மாதம் வட்டி தர முடியவில்லை. இதனால் மீண்டும் அவரிடம் ரூ. 44 ஆயிரம் வாங்கினேன். ஆனால் அவர் பணம் திருப்பி தரும் காலம் முன்னரே ரூ. 44 ஆயிரத்திற்கு கூடுதல் வட்டி கேட்டு ரூ.60 ஆயிரமாக திருப்பி கேட்கிறார். மேலும் எனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறார்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    இதுகுறித்து விசாரித்த போலீசார் பெண் சந்திரா மீது அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 'ஆபரேஷன் கந்துவட்டி' திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டதையடுத்து முதல் கந்து வட்டி வழக்கு பெண் மீது பாய்ந்துள்ளது.

    ×